Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு ஆசிய மோதலின் தாக்கம்!! இந்தியாவில் பொருளாதார நிலை!!

மேற்கு ஆசிய மோதலின் தாக்கம்!! இந்தியாவில் பொருளாதார நிலை!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 April 2026 9:19 PM IST

மேற்கு ஆசிய மோதலின் தாக்கத்தால் இந்தியாவில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில், LPG மற்றும் LNG விநியோகம், மின்சார இருப்பு, உரங்களின் இருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிலிருந்து LPG மற்றும் LNG பெறப்பட்டு வருவதாக அமைச்சரவைச் செயலாளர் தெரிவித்தார். உள்நாட்டு நுகர்வோருக்கான LPG விலைகள் மாற்றமின்றித் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.


குடிமக்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். தவறான தகவல்கள் பரவாமல் தடுக்கவும், பொதுமக்களுக்குச் சரியான தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News