பாஜக ஆட்சிக்கு வந்தால் சிஏஏ அமல்!! மேற்கு வங்க மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!!

By : Bharathi Latha
பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில், மாநிலம் முழுவதும் ஊழல் நடப்பதாக குற்றம் சாட்டினார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் சிண்டிகேட்கள் தொடர்புடைய ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய, பாஜக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடும் என்றார்.
மேற்கு வங்கத்தில் விரைவில் சிஏஏ அமல் செய்யப்படும் என்றும், இங்கிருக்கும் ஊடுருவல்காரர்கள் மூட்டை, முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு கிளம்ப தயாராக இருக்கும்மாறு கூறினார். மேலும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி அளிக்கப்படும் என கூறினார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால், தற்போதைய நலத்திட்டங்களை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. அதை நம்பவேண்டாம் எனவும், பாஜக எந்தத் திட்டத்தையும் நிறுத்தாது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
