Kathir News
Begin typing your search above and press return to search.

மகிழ்ச்சியின் திருவிழா ஹோலி பண்டிகை: நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து!

மகிழ்ச்சியின் திருவிழா ஹோலி பண்டிகை: நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 March 2021 5:18 PM IST

ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமையை நன்மை வெற்றி கொண்டதன் நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது மக்கள் ஒருவர் மீதொருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்துகின்றனர். குறிப்பாக வட இந்தியாவில் இந்த ஹோலி பண்டிகையானது மிகவும் நேர்த்தியாகவும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மக்கள் தங்களுடைய தீமைகளை விட்டுவிட்டு, நன்மைகளை ஏற்றுக் கொள்ளும் ஒரு திருநாளாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. நேற்று ஹோலிகா தகான் கொண்டாட்டங்கள் நடந்தன. இத்தகைய திருநாளில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. நேற்று ஹோலிகா தகான் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "உங்கள் அனைவருக்கும் மிகவும் இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். மகிழ்ச்சி, மேன்மை, சந்தோஷம் மற்றும் உயர்வு ஆகியவற்றின் இந்த திருவிழா அனைவரின் வாழ்க்கையிலும் புதிய வீரியத்தையும் புதிய ஆற்றலையும் ஊக்குவிக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி இந்தியில் பதிவிட்டுள்ளார்.




மேலும் இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "சக குடிமக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழா, ஹோலி, சமூக நல்லிணக்கத்தின் பண்டிகை, இது மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிறைவையும், நம்பிக்கையையும் தருகிறது. இந்த திருவிழா நமது கலாச்சார பன்முகத்தன்மைக்கு ஒருங்கிணைந்த தேசியவாதத்தின் உணர்வை மேலும் வலுப்படுத்தும் " என்று பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News