Kathir News
Begin typing your search above and press return to search.

ஏப்ரல் மத்தியில் உச்சகட்டம் அடையும் கொரோனா இரண்டாவது அலை: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

ஏப்ரல் மத்தியில் உச்சகட்டம் அடையும் கொரோனா இரண்டாவது அலை:  ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 April 2021 5:00 PM IST

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோய்களின் இரண்டாவது அலை ஏப்ரல் நடுப்பகுதியில் உச்சம் பெறக்கூடும் என்று கணித மாதிரியைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதைத் தொடர்ந்து மே மாத இறுதியில் கொரோனா தொற்றுநோய் முழுமையாக சரியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுகளின் முதல் அலையின் போது, சூத்ரா என பெயரிடப்பட்ட கணித அணுகுமுறை, ஆகஸ்ட் மாதத்தில் தொற்றுநோய்களின் ஆரம்ப எழுச்சி செப்டம்பர் மாதத்திற்குள் உயரும் மற்றும் பிப்ரவரி 2021 இல் குறையும் என்று கணித்தது.


கான்பூரின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) கல்வி நிறுவனத்தின் மனிந்திர அகர்வால் உள்ளிட்ட விஞ்ஞானிகள், தற்போதைய தொற்றுநோய்களின் பாதையை கணிக்க இந்த மாதிரியைப் பயன்படுத்தினர். மேலும் ஏப்ரல் நடுப்பகுதியில் தினசரி புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று கண்டறிந்தனர்.

"கடந்த பல நாட்களாக மேற்கொண்ட ஆய்வில், ஏப்ரல் 15-20'க்கு இடையில் இந்தியாவில் பாதிப்புகள் பெருமளவில் உயரக்கூடும் என்பதற்கு ஒரு நியாயமான வாய்ப்பு இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அதே நேரத்தில் மே மாத இறுதிக்குள் கொரோனா தொற்று வியத்தகு முறையில் மிகவேகமாகக் குறையும்" என்று அகர்வால் கூறினார்.


"கூர்மையான உயர்வு காரணமாக தினசரி புதிய தொற்றுநோய்களின் உச்ச மதிப்பைக் கணிப்பதில் சில நிச்சயமற்ற தன்மை உள்ளது. தற்போது, இது ஒரு நாளைக்கு 1 லட்சம் புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகி வருகிறது. இது மேலே அல்லது கீழே போகலாம். ஆனால் நேரம் ஏப்ரல் 15-20க்கு இடையில் உச்சம் பெரும்" என்று அவர் மேலும் கூறினார்.

தற்போதைய இரண்டாவது அலையில், உச்சம் பெறும் முதல் மாநிலம் சில நாட்களில் பஞ்சாபாகவும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவாகவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இருப்பினும், IIT கான்பூர் பேராசிரியர் மேலும் கூறுகையில், புதிய உச்சம் பற்றிய மாதிரியின் கணிப்பு, வரக்கூடிய நாட்களில் பதிவாகும் தினசரி புதிய தொற்றுத் தரவுகளைப் பொறுத்தது என்றார்.


"ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய மாற்றம் கூட உச்ச எண்களை பல ஆயிரம் எண்களால் மாற்றும். ஆனால் உச்சகட்ட பாதிப்பு ஏப்ரல் நடுப்பகுதியில் நிச்சயம் உள்ளது" என்று அவர் கூறினார். ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கவுதம் மேனன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் மேற்கொண்ட சுயாதீன கணக்கீடுகள், ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்து மே நடுப்பகுதிக்கு இடையில் தொற்றுநோய்களின் அலைகளின் உச்சம் இருக்கக்கூடும் என்று கணித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News