தடுப்பூசி செலுத்துவதில் மைல்கல்லை எட்டிய மிக விரைவான நாடு இந்தியா தான்: மத்திய அரசு தகவல்!

By : Bharathi Latha
நாட்டில் கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டதன் மொத்த எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ள நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று 85 நாட்களில் 10 கோடி டோஸை செலுத்திய மிக விரைவான நாடு இந்தியா என்று அறிவித்துள்ளது. 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்க அமெரிக்கா 89 நாட்கள் எடுத்தது கொண்டது. அதே எண்ணிக்கையை கடக்க சீனா கிட்டத்தட்ட 102 நாட்கள் எடுத்தது கொண்டது.
உலகளவில் தடுப்பூசி செலுத்தப்படும் தினசரி அளவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இந்தியா ஒரு நாளைக்கு சராசரியாக 38,93,288 டோஸ்களை செலுத்தி முதலிடத்தில் உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 85 நாட்களில் அமெரிக்கா 9.2 கோடி டோஸ்களையும், சீனா மற்றும் இங்கிலாந்து முறையே 6.1 கோடி டோஸையும், 2.1 கோடி டோஸையும் 85 நாட்களில் வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசி மைல்கல்லை எட்டிய மிக விரைவான நாடு என இந்தியா காட்டும் ஒரு விளக்கப்படத்தையும் பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்து, "ஆரோக்கியமான மற்றும் கொரோனா இல்லா இந்தியாவை உறுதி செய்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்துகிறது" என்று கூறியது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட மொத்த டோஸ்களில் 60.62 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
