கோவாக்சின் உற்பத்தியை ஆண்டுக்கு 1 பில்லியன் ஆக அதிகரித்தது பாரத் பையோடெக்.!
By : Janani
வியாழக்கிழமை அன்று பாரத் பையோடெக் கொரோனா தொற்றுக்கு எதிராகச் செலுத்தப்படும் தடுப்பூசியான கோவாக்ஸின் உற்பத்தித் திறனை 200 மில்லியன் டோஸ் விரிவுபடுத்துவதாகக் கூறி, ஆண்டுக்கு 1 பில்லியன் டோஸ் ஆக விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
GMP வசதிகளின் கீழ் ஆண்டுக்கு 200 மில்லியன் டோஸ் அதிகரிப்பதாக பாரத் பையோடெக் தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கூடுதல் அளவு குஜராத்தில் அமைந்துள்ள துணை நிறுவனமான சிரான் பெஹ்ரிங் தடுப்பூசிகளைத் தயாரிக்கும், மேலும் தயாரிப்புகள் 2021 இல் நான்காவது காலாண்டில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இது ஆண்டுக்கு 1 பில்லியன் டோஸ் வரை திறம்படத் தயாரிக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் பாரத் பையோடெக் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த மூன்றாம் கட்ட சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றது. மேலும் அது 10 முதல் 12 நாட்களில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. "அடுத்த 10-12 நாட்களில் சோதனைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக," Dr VK பால் செய்தி அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் இதற்குக் கடந்த வாரம் தேசிய மருந்துகள் கட்டுப்பாடுகள் ஆணையத்தின் ஜெனரல் ஒப்புதல் அளித்தார். இந்த சோதனையானது 525 தன்னார்வலர்கள் மீது சோதனை செய்யவுள்ளது.
நாட்டில் கொரோனா தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்குச் சோதனை செய்வது இதுவே முதல் முறையாகும். இந்த சோதனை ஓட்டமானது நாள் 1 மற்றும் நாள் 28 இல் இரண்டு தடுப்பூசிகளை உள்ளடக்கும். மேலும் டெல்லி AIIMS, பாட்னா AIIMS மற்றும் நாக்பூரில் உள்ள மெடிட்டிரினா மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டிடூட் போன்ற தளங்களில் நடைபெறவுள்ளது.
With Inputs from Business Today