ஆன்லைன் கேம் விளையாடுபவர்களுக்கு கடிவாளம் போட்ட மத்திய அரசு.. அக்டோபர் 1 முதல் மாற்றம்..
By : Bharathi Latha
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சுமார் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சர் அவை சபை நேற்று ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் சூதாட்ட விடுதிகள் மற்றும் சில குதிரை பந்தய கிளப்புகள் தற்போது 18 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்துகின்றன. இதனை 28 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு தற்போது முடிவு செய்து இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த 2ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த வரி இந்தியாவில் அமல்படுத்தப்பட இருக்கிறது.
இந்தியா முழுவதும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பாக மத்திய ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரம் மாநில ஜிஎஸ்டி சட்டங்களில் இது தொடர்பாக திருத்தங்களை அந்தந்த சட்டசபைகளில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்ந்து வரியை ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த இதில் முக்கியமாக பதிவு மற்றும் வரி செலுத்துதல் விதிகளுக்கு இணங்க தவறினால் வெளிநாடுகளில் உள்ள ஆன்லைன் விளையாட்டு தளங்களுக்கான அனுமதியை தடுப்பதற்கும் இந்த திருத்தங்கள் உதவும் என்றும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News