Kathir News
Begin typing your search above and press return to search.

வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான இறக்குமதி வரி 10% தள்ளுபடி: மத்திய அரசு முடிவு!

வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான இறக்குமதி வரி 10% தள்ளுபடி: மத்திய அரசு முடிவு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 April 2021 5:06 PM IST

இந்தியாவிலும் கொரோனா தன்னுடைய கோர முகத்தை காட்டி, இரண்டாவது அலையின் தாக்கத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. தற்போது மத்திய அரசு தடுப்பூசி மக்களுக்கு போடுவதில் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வருகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்த தடுப்பூசிக்கு மட்டுமன்றி வெளிநாட்டு தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அந்த வகையில் வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான இறக்குமதி வரி 10% தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலை தொற்றால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசியை 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்தலாம் என்றிருந்த நிலையில் வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயது மேற்பட்டவர்கள் போடலாம் என அரசு அறிவித்துள்ளது.


இந்த நிலையில் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான இறக்குமரி வரி 10% தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், அரசின் தலையீடு இன்றி தனியார் நிறுவனங்களே இறக்குமதி செய்து வெளிச்சந்தையில் விலை வைத்து விற்பனை செய்ய அனுமதி அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக கூறினார். ஏற்கனவே ரஷ்யாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடதக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News