Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கொரோனாவின் கோர முகம்: 10 மாநிலங்களில் உச்சக்கட்ட பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவின் கோர முகம்: 10 மாநிலங்களில் உச்சக்கட்ட பாதிப்பு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 May 2021 5:19 PM IST

இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து ஏறுமுகமாக ஏறிக் கொண்டேதான் வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 5வது முறையாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா காரணமாக உலக நாடுகள் பலவும் பல உதவிகளை செய்துள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்களை சமாளிப்பதற்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகமாக தேவைப்படுகிறது. மேலும் ஆக்சிஜன் சப்ளைகளின் பற்றாக்குறையும் ஆங்காங்கே இருந்து வருகிறது.


இந்தியாவில் 10 மாநிலங்களில் கடந்த ஒரே நாளில் மட்டும் சுமார் 74% பெயர் கொரோனாவினால் பாதிக்கப் பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் காரணமாக மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,62,575 ஆக தற்பொழுது அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறியிருந்தது.


இந்தியாவில் 10 மாநிலங்களில் மொத்தம் 74% பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளுக்கு 48,401 ஆகவும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 47,930 மற்றும் கேரளத்தில் 35,801 ஆகவும் உள்ளது. தமிழகம் 28,897, உத்தரப் பிரதேசம் 23,175, ஆந்திரத்தில் 22,164, மேற்கு வங்கம் 19,441, ராஜஸ்தான் 17,921, அரியானா 13,548, டெல்லி 13,336 ஆகிய மாநிலங்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக தான் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News