இந்தியாவில் மின்சார பயன்பாடு மே மாதத்தில் 10.4 சதவீதம் சரிவு!
By : Janani
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் தினசரி மின்சார பயன்பாடு 10.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 4,074 பில்லியன் ஆக இருந்த சராசரி மின் உற்பத்தி மே மாதத்தில் 3,664 பில்லியன் டன் ஆகச் சரிந்தது. பொதுவாக மே மாதத்தில் கோடைக்காலம் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளால் மக்கள் அதிக அளவில் ஏர் கண்டிஷனர் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் அதிகளவில் மின்சார பயன்பாடு உச்சத்தை அடையும்.
2020 பிற்பகுதியில் தொற்று நோயின் பொருளாதார மீட்சி பெற்றதைத் தொடர்ந்து மின்சார தேவையும் அதிகரித்தது என்று அரசாங்க அதிகாரி தெரிவித்தார். இந்தியாவின் வருடாந்திர மின்சார பயன்பாட்டில் பாதி இந்தியத் தொழில்துறை மற்றும் அலுவலகம் பங்கு பெறுகின்றது.
மாநிலங்களில் முக்கால்வாசி ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் குறைந்த மின்சார பயன்பாட்டைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக இந்தியாவில் மின்சார பயன்பாடு 7.2 சதவீதம் உயர்ந்தது.
தெற்கு மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக, வடக்கு மாநிலங்கள் ராஜஸ்தான், டெல்லி மற்றும் சிக்கிம் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட கடும் ஊரடங்கு நடவடிக்கை காரணமாகக் கடந்த ஆண்டு இதே காலத்தை விட மின்சார பயன்பாடு குறைந்துள்ளது
source: https://www.businesstoday.in/current/economy-politics/india-electricity-use-fell-10-4-in-may-amid-second-covid-19-wave/story/440592.html