Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தடுப்பூசி! அமெரிக்காவின் திறனை முறியடித்த இந்தியா - 109 நாட்களில் திறம்பட கையாண்ட சாதனை!

கொரோனா தடுப்பூசி! அமெரிக்காவின் திறனை முறியடித்த இந்தியா - 109 நாட்களில் திறம்பட கையாண்ட சாதனை!

MuruganandhamBy : Muruganandham

  |  6 May 2021 12:46 AM GMT

இந்தியாவில் மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து வழங்கல் திட்டம் விரிவடைந்து வரும் நிலையில், 16 கோடிக்கும் அதிகமானோருக்கு இதுவரை கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வெறும் 109 நாட்களில் இந்த மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது. இதே அளவை எட்ட அமெரிக்காவுக்கு 111 நாட்களும், சீனாவுக்கு 116 நாட்களும் ஆயின.

12 மாநிலங்களில் உள்ள 18 முதல் 45 வயது வரையிலான 6,71,285 பயனாளிகள் கொவிட் தடுப்பு மருந்தை பெற்றுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் 109-வது நாளில் 14,84,989 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன. 14,011 முகாம்களில், 7,80,066 பயனாளிகளுக்கு முதல் டோசும், 7,04,923 பயனாளிகளுக்கு இரண்டாவது டோசும் வழங்கப்பட்டன.

இந்தியாவில் இது வரை மொத்த எண்ணிக்கையாக 1,69,51,731 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைதல் விகிதம் 82.03 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,38,439 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

73.4% புதிய குணமடைதல்களுக்கு 10 மாநிலங்கள் காரணமாக உள்ளன. தொடர்ந்து குறைந்து வரும் இறப்பு விகிதம் 1.09 சதவீதமாக தற்சமயம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,780 இறப்புகள் பதிவாகியுள்ளன.

74.97% புதிய இறப்புகளுக்கு 10 மாநிலங்கள் காரணமாக உள்ளன. மகாராஷ்டிராவில் மிக அதிகமாக 891 உயிரிழப்புகளும், உத்தரப் பிரதேசத்தில் 351-ம் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு இறப்பு கூட பதிவாகவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News