Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்முவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 11 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் - இவர்கள் மீது தான் CAA பாயும்!

ஜம்முவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 11 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் - இவர்கள் மீது தான் CAA பாயும்!

MuruganandhamBy : Muruganandham

  |  11 April 2021 2:00 AM GMT

ரோஹிங்க்யர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மியான்மரில் கடந்த 2015-இல் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதனால் வங்கதேசம் வழியாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா மக்கள் நுழைந்தனர்.

அவர்கள் அசாம், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், தில்லி,காஷ்மீர், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜம்முவில் சுமார் 11 ஆயிரம் ரோஹிங்கியாமுஸ்லிம்கள் வசிப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள்தெரிவித்துள்ளன. அவர்களில் 155 பேர் ஜம்முவின் மவுலானா ஆசாத் மைதானத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில், ''சட்ட விதிகளை பின்பற்றி ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பலாம். எனினும்சட்டவிதிகளை மீறி யாரையும் மியான்மருக்கு நாடு கடத்தக்கூடாது'' என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் கிடையாது. அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி உள்ளனர். அவர்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஐ.நா. சபைசார்பில் விளக்கம் அளிக்க அனுமதிகோரப் பட்டது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News