பினாமி நடவடிக்கைகளை வேரறுக்கும் மத்திய அரசு - சென்னையில் 11217 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து : அடையாளம் காணப்பட்ட போலி நிறுவனங்கள்!

உண்மையான வர்த்தகச் செயல்பாடுகள் அல்லது சொத்துகள் இல்லாத, வரி ஏய்ப்பு, பணமோசடி, பினாமி நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் போலி நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய நிறுவனங்களைக் கண்டறிந்து, உரிமங்களை ரத்து செய்வதற்காகச் சிறப்புப் பணிக்குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. 2018-2021 ஆண்டுகளில் 2,38,223 போலி நிறுவனங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது.
சென்னை பகுதியில் 2018 முதல் 2021 ஜூன் வரை 11217 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 191 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
2018 முதல் 2021 வரை 370 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2018-19-ம் ஆண்டில் 6 வெளிநாட்டு நிறுவனங்களும், 2019-20-ம் ஆண்டில் 7 வெளிநாட்டு நிறுவனங்களும், 2020-21-ம் ஆண்டில் 9 வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளன.
2019-ம் ஆண்டு 118 வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ 135கோடிக்கும் மேல் பதிவுக் கட்டணமாகவும், 2020-ம் ஆண்டு 124 வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ 132கோடிக்கும் மேல் பதிவுக் கட்டணமாகவும், 2021-ம் ஆண்டு 78 வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ 7கோடி பதிவுக் கட்டணமாகவும் பெறப்பட்டுள்ளன.