ரயில் மூலம் 12 சிறுமிகளை கடத்திய பாதிரியார் கைது! அதிர்ச்சி பின்னணி என்ன?
By : Dhivakar
கேரளா: ராஜஸ்தானிலிருந்து சிறுமிகளை கடத்தியது தொடர்பாக, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்திய அளவில் பல்வேறு சட்டவிரோத செயல்களில், கிறிஸ்தவ மிஷனரிகள் ஈடுபட்டு வருவதாக, பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ராஜஸ்தானிலிருந்து, 12 சிறுமிகளை ரயில் மூலம் நான்கு பெரியவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து வந்துள்ளனர். சந்தேகமடைந்த ரயில்வே காவல்துறையினர் 4 நபர்களிடம் நடத்திய விசாரணையில், "கேரளாவிலுள்ள பாதிரியார் ஜேக்கப் வர்கீஸ் இலவசமாக மானவிகளை படிக்க வைக்கிறார் என்று கூறியதன் பேரில் நாங்கள் இச்சிறுமிகளை அழைத்து வந்துள்ளோம்." என்று போலீசாரிடம் அந்த பெரியவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் பதில் அளித்ததால், சந்தேகமடைந்த ரயில்வே காவல்துறையினர், பாதிரியார் ஜேக்கப் வர்கீஸை விசாரணைக்காக கைது செய்துள்ளனர். "சிறுமிகளை கட்டாய மதமாற்றம் செய்வதற்காக அழைத்து வந்தார்களா?" என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிரியார் ஜேக்கப் வர்கீஸ், கருணா அறக்கட்டளையின் இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.