ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,250 கோடி தொகுப்பில் நிவாரண நிதி வழங்கக் கர்நாடக அரசு உத்தரவு!
By : Janani
கொரோனா தொற்று காரணமாகக் கர்நாடகாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு 1,250 கோடியில் நிவாரண தொகுப்பை வழங்கவுள்ளதாக முதலமைச்சர் B S எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். "கொரோனா முதல் அலையின் போது பல்வேறு துறைகளுக்கு நிதி தொகுப்பை வழங்கியதாக," அவர் தெரிவித்தார்.
அது தவிர, தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டால் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை பாதித்துள்ளது, அதனால் 1,250 நிவாரண திட்டத்தை அறிவிப்பதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்த கடினமான காலத்தில் மக்களுடன் துணை நிற்பதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று உட்சமடைந்ததை தொடர்ந்து, கர்நாடகாவில் முதலில் ஏப்ரல் 27 தளர்வுகள் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டது, பின்னர் மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. நிவாரண திட்டங்களின் விவரங்களைப் பட்டியலிட்டு, ஒரு ஹெக்டக்கெற் இழப்புக்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இது 12.37 கோடி செலவில் 20,000 விவசாயிகளுக்குப் பயனளிக்கும்.
மேலும் பழம் மற்றும் காய்கறி விவசாயிகளுக்கு இழப்பீடாக 69,000 விவசாயிகளுக்கு 69கோடி செலவில் 10,000 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இது தவிர டாக்ஸி, ஆட்டோ மற்றும் மாக்ஸி CAB ஓட்டுநர்களுக்கு முறையாகப் பதிவு செய்து லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு 3,000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின் பொது பொருளாதார நிவாரண நிதி வழங்கிய முதல் மாநிலம் கர்நாடகா ஆகும்.
source: https://economictimes.indiatimes.com/news/india/karnataka-govt-announces-rs-1250-cr-covid-relief-package-for-those-hit-by-lockdown/articleshow/82763737.cms