Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கை சிறையில் இருந்து 13 மீனவர்கள் விடுதலை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 55 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்கள் இலங்கை கடல் எல்லையில் நுழைந்தாக அவர்களை அந்நாட்டு கடற்படைகைது செய்து சிறையில் அடைத்தது. ஒரு நேரத்தில் 55 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இலங்கை சிறையில் இருந்து 13 மீனவர்கள் விடுதலை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!
X

ThangaveluBy : Thangavelu

  |  5 Jan 2022 1:06 PM IST

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 55 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்கள் இலங்கை கடல் எல்லையில் நுழைந்தாக அவர்களை அந்நாட்டு கடற்படைகைது செய்து சிறையில் அடைத்தது. ஒரு நேரத்தில் 55 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தால் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலக வளாகத்தில் விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள் மற்றும் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர் இதில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கடலுக்கு செல்லாமல் மற்ற மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அது மட்டுமின்றி மீனவர்களின் குடும்பத்தார் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இலங்கை அரசிடம் பேசி உடனடியாக தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா, ஸ்ரீலங்கா ட்விட்டர் பதிவை ரீ ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், தமிழகத்தைச் சேர்ந்த 13 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் என்பதனை மன்னாரில் உள்ள எமது வழக்கறிஞர் ஊடாக அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இது குறித்த விபரங்கள் தொடரும் என கூறப்பட்டுள்ளது.

Source: Twiter

Image Courtesy: BBC

Next Story
கதிர் தொகுப்பு
Trending News