"கடந்த நான்கு ஆண்டுகளில் 1.30 கோடி நபர்கள் G.S.T யில் பதிவு" - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!
By : Parthasarathy
இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை நீக்கி, நாடு முழுதும் ஒரே வரி முறையான சரக்குகள் மற்றும் சேவை வரி (G.S.T) அமல்படுத்தப்பட்டது. இந்த வரி திட்டம் தொடங்கி இன்று முதல் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து உள்ளது. இந்த புதிய வரி முறையால் ஏற்பட்டிருக்கும் நன்மைகள் மற்றும் பலன்கள் குறித்து ட்விட்டரில் "#4yearsofGST" என்று குறிப்பிட்டு, இந்த வரி முறையால் இந்திய நாட்டில் ஏற்பட்டிருக்கும் நல்ல முன்னேற்றங்கள் பற்றி கூறி வருகின்றனர்.
இது குறித்து மத்திய நிதியமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் "கடந்த நான்கு ஆண்டுகளில், ஜி.எஸ்.டி. நடைமுறை பல கட்டங்களில் எளிமையாக்கப்பட்டு வந்தது. இதனால் வணிக நிறுவனங்கள், வர்த்தகர்கள் சுலபமாக வரி செலுத்துகின்றனர். நுகர்வோர் மற்றும் வரி செலுத்துவோருக்கு ஏற்றதாக இந்த திட்டம் அமைந்துள்ளது.முந்தைய வரி முறையில், வரி பணம் அதிகாமாக இருந்ததால் வரி செலுத்துவோருக்கு பாரமாக இருந்தது, ஆனால் ஜி.எஸ்.டி. முறையில், மக்கள் செலுத்தும் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளில் 1.30 கோடி நபர்கள் தன்னை ஜி.எஸ்.டி. யில் பதிவு செய்துள்ளனர். 66 கோடிக்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி. கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்பு ஒரு நிறுவனம் பல மாநிலங்களில் வர்த்தகம் செய்ய, அந்தந்த மாநிலங்களில் 495 வகை ஆவணங்களை அளிக்கும் நிலை இருந்தது.
இந்த முறை ஜி.எஸ்.டி யில் 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல, மக்கள் பல வரியினங்கள் வாயிலாக சராசரியாக செலுத்தி வந்த 31 சதவீத வரியை, ஜி.எஸ்.டி.,யில் 5 முதல் 28 சதவீதம் வரை, ஐந்து பிரிவுகளின் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வரி செலுத்தும் சுமை குறைந்துள்ளது." என்று அதில் கூறியிருந்தது .