Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவில் வெற்றிபெற சுமார் 135 கோடியை இந்தியாவிற்கு கொடுக்க இருக்கும் கூகுள் நிறுவனம்!

கொரோனாவில் வெற்றிபெற சுமார் 135 கோடியை இந்தியாவிற்கு கொடுக்க இருக்கும் கூகுள் நிறுவனம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 April 2021 5:25 PM IST

பல உலக நாடுகளையும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் பாதித்து வருகிறது. மேலும் இரண்டாவது அலையின் தாக்கத்தை எதிர்நோக்கி போராடி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மேலும் மருந்து கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பல பேருடைய உயிர்கள் பறிக்கப்பட்டு வரும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்கா, பிரான்சு, கனடா உள்ளிட்ட பல உலக நாடுகள் இந்தியாவுக்கு தங்களுடைய உபகரணங்கள் மற்றும் அவசர உதவிப் பொருட்கள் பெற உதவி செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனமும் இந்தியாவிற்கு உதவ முடிவு செய்துள்ளது.


கூகுள் நிறுவனத்தை தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் சுந்தர் பிச்சை அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த செய்தி ஒன்றை ட்விட் செய்து வெளியிட்டுள்ளார். அதாவது, இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அவசர மருத்துவ பொருட்களைப் பெற கூகிள் ரூ.135 கோடி ரூபாய் அதே அமெரிக்க டாலரின் $ 18 மில்லியன் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.


இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் கொரோனா தொற்று பரவலால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மூன்றரை லட்சமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகள் ஆக்சிஜன் கிடைக்காமலும் திணறி வருகின்றன. இந்நிலையில் கூகிள் உட்பட பல முன்னணி நிறுவனங்களும் பல உலக நாடுகளும் இந்தியாவுக்கு உதவியை செய்ய முன்வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News