Kathir News
Begin typing your search above and press return to search.

பழங்குடியின மக்களை குறிவைத்து மதமாற்ற பிரச்சாரம்! சீரும் சிறப்புமாக செய்துவரும் கிறிஸ்தவ மத போதகரும் அவரது மனைவியும்!

பழங்குடியின மக்களை குறிவைத்து மதமாற்ற பிரச்சாரம்! சீரும் சிறப்புமாக செய்துவரும்  கிறிஸ்தவ மத போதகரும் அவரது மனைவியும்!
X

DhivakarBy : Dhivakar

  |  8 March 2022 5:21 PM GMT

ஜார்க்கண்டில் பழங்குடியின மக்களை குறிவைத்து, 'ரவி சிங் ' என்ற கிறிஸ்தவ மத போதகர், சட்டவிரோத மதமாற்ற செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மேற்கத்தியத்திலிருந்து கிறிஸ்தவ மதபோதகர்கள் இந்தியாவில் காலடி வைத்தது முதலே, பழங்குடியின மக்களையும், பட்டியல் இன மக்களையும் குறிவைத்து மதமாற்றச் செயல்களில் தீவிரமாக இறங்கி வேலை செய்து வருகின்றனர்.

நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களிடம், சனாதன மதத்தின் தத்துவத்தையும் மேன்மையையும் எடுத்துச் செல்லாதவன் விளைவே கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சாரத்தின் வெற்றிக்கு வித்திட்டது.


இதை தெளிவாக புரிந்து கொண்ட கிறிஸ்தவ மிஷனரிகள், இன்றும் பட்டியலின மக்களையும் பழங்குடியின மக்களையும் குறிவைத்து, மதமாற்ற செயல்களை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றனர்.


இதன் வரிசையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரவி சிங் என்ற கிறிஸ்துவ பாதிரியார் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து 'Faith Healing Service' என்ற பெயரில், ஞாயிற்றுக்கிழமைகளில் 'குல்லிபில் ' என்ற பழங்குடியின மக்களை மூளை சலவை செய்து, மதமாற்ற செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதை கண்டித்து கடந்த மாதம் 27ஆம்தேதியன்று, பல்வேறு இந்து அமைப்புகள் 'ரவி சிங்'கை கைது செய்ய வேண்டி போராட்டம் நடத்தினர்.


இப்போராட்டத்தின் விளைவாக ஜார்க்கண்ட் காவல்துறை, ரவியை காவலில் எடுத்து 24மணி நேரத்திற்குள் விடுவித்து விட்டது.


ஹேமந்த் சோரன் அரசு இத்தகைய மதமாற்ற பிரச்சார போதகர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன்?? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Opindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News