பீகாரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற மாபெரும் கின்னஸ் சாதனை நிகழ்வு!
By : Dhivakar
பீகார் : கடந்த 23ஆம் தேதியன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கெடுத்த நிகழ்ச்சியில், 78,220 தேசியக் கொடிகளை பொதுமக்களும் பா.ஜ.க'வினரும் தங்களது கைகளில் ஏந்தி அசைத்துள்ளனர்.
இந்தியர்கள் தங்களின் நாட்டுப்பற்றை கொண்டாட தேசியக்கொடி முக்கிய பங்கு வகிக்கிறது. ஜாதி, மதம், இனம், மொழி மற்றும் பிராந்தியங்கள் கடந்து நம்நாட்டு தேசியக்கொடி இந்தியர்களை ஒரு குடையில் அனைத்து ஒற்றுமைப்படுத்துகிறது.
அப்படிப்பட்ட தேசியக்கொடியை கையிலேந்தி அசைப்பது ஒவ்வொரு இந்தியனும் ஆசைப்படும் தருணமாகும்.
பீகாரில் கடந்த 23ஆம் தேதியன்று, வீர் குன்வர் சிங் விஜயோத்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது.அந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பங்கெடுத்த பொதுமக்களும், பா.ஜ.க'வினரும் 78,220 தேசியக் கொடிகளை அசைத்து, கின்னஸ் புத்தகத்தில் இந்த நிகழ்வை இடம்பெறச் செய்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பேசுகையில்: உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 78,220 பேர் தேசியக் கொடியை அசைத்தனர். தேசியக் கொடிகளை அசைப்பதில் இது புதிய உலக சாதனையாகும். பீகார் மக்கள் தானாக முன்வந்து ஒரே இடத்தில் இவ்வளவு பெரிய கொடிகளை அசைத்தது பாராட்டுக்குரியது.
என்று பேசினார்.