Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் மொத்த திரவ ஆக்ஸிஜன் இறக்குமதி அளவு 13740 மெட்ரிக் டன்னாக அதிகரிப்பு! பொதுத்துறை நிறுவனங்களின் மகத்தான சேவை!

இந்தியாவில் மொத்த திரவ ஆக்ஸிஜன் இறக்குமதி அளவு 13740 மெட்ரிக் டன்னாக அதிகரிப்பு! பொதுத்துறை நிறுவனங்களின் மகத்தான சேவை!

MuruganandhamBy : Muruganandham

  |  13 May 2021 1:15 AM GMT

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு பொதுத்துறை நிறுவனங்கள், கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த நாடு எடுத்து வரும் முயற்சிகளுக்கு தங்களது உதவிக் கரத்தை நீட்டி வருகின்றன.

இந்த வகையில், திரவ ஆக்சிஜனுக்கான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதற்கு அவை குறிப்பாக பணியாற்றி வருகின்றன. தற்சமயம், 650 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் 12 டேங்கர்களும் 20 ஐஎஸ்ஓ கொள்களன்களும் உள்ளன.

இந்த மாத இறுதிக்குள் 26 டேங்கர்கள் மற்றும் 117 ஐஎஸ்ஓ கொள்களன்கள் என இவற்றின் கொள்ளளவு 2314 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கவுள்ளது.

1940 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கூடிய 95 ஐஎஸ்ஓ கொள்களன்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. 650 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கூடிய 30 ஐஎஸ்ஓ கொள்களன்களுக்கு ஆர்டர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கொள்களன்களுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

40/50 லிட்டர் கொள்ளளவுடன் கூடிய பத்தாயிரம் உருளைகளுக்கும், அதிக கொள்ளளவுடன் கூடிய உருளைகளுக்கும் ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் விநியோகம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் திரவ ஆக்சிஜனையும் இறக்குமதி செய்கின்றன. பகரைன், ஐக்கிய அரபு எமிரேட், சவூதி அரேபியா, குவைத் மற்றும் தாய்லாந்திலிருந்து 900 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதி ஏற்கனவே வந்தடைந்துவட்ட நிலையில்

மற்றொரு பகுதி விரைவில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 12840 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வர்த்தக அடிப்படையில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மொத்த இறக்குமதிகளின் அளவு 13740 மெட்ரிக் டன்னாக இருக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News