Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக எதிர்கட்சி தலைவரை விட கணக்கில் வெளுத்து வாங்கும் ராகுல் காந்தி! இந்தியாவில் 14 கோடியை 1% என நம்பிக்கொண்டிருக்கும் பரிதாபம்!

தமிழக எதிர்கட்சி தலைவரை விட கணக்கில் வெளுத்து வாங்கும் ராகுல் காந்தி! இந்தியாவில் 14 கோடியை 1% என நம்பிக்கொண்டிருக்கும் பரிதாபம்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  28 April 2021 7:01 AM IST

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 10% மேல் கடந்து விட்ட நிலையில், நமது தடுப்பூசி விகிதத்தை இன்னும் 1% என்று ட்வீட் செய்கிறார்.

இந்த ஆண்டு ஜனவரி 16 அன்று உலகின் மாபெரும் தடுப்புமருந்து வழங்கல் திட்டத்தை இந்தியா தொடங்கியது. மே 1 முதல் பரவலாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கொரோனா தடுப்புமருந்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.




தடுப்பு மருந்தின் விலையை தாராளமயமாக்கவும், அதிகம் பேரை தடுப்பு மருந்து சென்றடையவும் மூன்றாம் கட்ட தடுப்புமருந்து திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

பரவலாக்கப்பட்ட தடுப்புமருந்து திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளின் கொள்முதல், தகுதியான வயது மற்றும் தடுப்பு மருந்து வழங்கல் ஆகியவை இணக்கமான வழிமுறைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இது வரை இலவசமாக வழங்கியுள்ளது. இவற்றில் 14,64,78,983 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன (வீணான தடுப்பு மருந்துகளையும் சேர்த்து).

ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இன்னும் கைவசம் இருக்கின்றன. அடுத்த 3 நாட்களில் 80 லட்சத்துக்கும் அதிகமன தடுப்பு மருந்துகள் மாநிலங்களை சென்றடையவுள்ளன.

மகாராஷ்டிராவில் தடுப்பு மருந்துகள் தீர்ந்து விட்டதென்றும், இதனால் அம்மாநிலத்தில் தடுப்பு மருந்து வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளதென்றும் சில அரசு அதிகாரிகள் சொன்னதாக சில ஊடக செய்திகள் சமீபத்தில் தெரிவித்தன.

ஏப்ரல் 27 அன்று (காலை 8 மணிக்கு) மகாராஷ்டிராவால் பெற்றுக்கொள்ளப்பட்ட கொவிட் தடுப்பு மருந்து டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 1,58,62,470 என்று தெளிவுப்படுத்தப்படுகிறது.

இவற்றில், வீணாதல் (0.22%) உள்ளிட்ட மொத்த நுகர்வு 1,49,39,410 ஆகும். எஞ்சிய 9,23,060 தகுதியுடைய மக்களுக்கு வழங்கப்படுவதற்காக அந்த மாநிலத்திடம் உள்ளன. மேலும், இன்னும் 3 நாட்களில் 3,00,000 டோஸ்கள் கொவிட் தடுப்புமருந்து வழங்கப்படும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News