பிரதமர் மந்திரி கிசான் சம்மன் யோஜனாவின் 15வது தவணை விரைவில்!
By : Sushmitha
2019 பிப்ரவரி 24ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட பி எம் கிசான் சம்மன் யோஜனா திட்டம் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகள் பலனடைவதற்காகவும் அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவி புரியவும், விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களை மேற்கொள்வதற்கான உள்ளீடுகளை வாங்குவதற்கு தேவைப்படும் நிதியை பூர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.
ஆண்டிற்கு ஆறாயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது இந்த 6 ஆயிரம் ரூபாயும் தலா 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் 14 வது தவணை தொகை கடந்த ஜூலை 27ஆம் தேதி அன்று 85 மில்லியன் விவசாயிகளுக்கு சுமார் ரூபாய் 17,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 2.59 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பி எம் கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் 15 வது தவணை தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வருகின்ற 2023 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் மத்திய அரசு தரப்பிலிருந்து வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source - Asianet news