புதிய சாதனையை படைத்த மேட் இன் இந்தியா ஐபோன்15!
By : Sushmitha
விற்பனையான ஒரே நாளில் ஐபோன் 14 விற்பனை முறியடித்து சாதனை படைத்தது ஐபோன் 15!
ஆப்பிள் ஐபோன் 15 விற்பனை இந்தியாவில் நேற்று தொடங்கியது. இந்த புதிய மொபைல் போனை வாங்குவதற்காக முன்கூட்டியே ஆர்டர் செய்திருந்தவர்கள் நேற்று காலை 8 மணி முதல் இருந்து ஆப்பிள் ஐபோன் 15 யை பெற்று வருகின்றனர்.
இந்த செல்போன் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ், 15 ப்ரோ 15 ப்ரோ மேக்ஸ் போன்றவை உள்ளது என்றும் சென்ற ஆண்டு வெளியான ஐபோனை விட அதிக சிறப்பம்சங்கள் நிறைந்த புதிய அம்சங்கள் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
முதல் நாளில் இந்த மொபைல் போனை வாங்குபவர்களுக்கு ரூபாய் 14,000 வரை தள்ளுபடி பெறலாம் என்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய இந்த ஆப்பிள் ஐபோன் 15 வின் இந்திய விலை ரூபாய் 79 ஆயிரத்து 900 என்றும் செய்திகள் வெளியானது. மேலும் நடிகர் மாதவன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15யை சொந்தமாக்கியது பெருமிதமும் மகிழ்ச்சியும் நிறைந்திருப்பதாக ட்விட் செய்திருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் ஐபோன் 15 விற்பனை செய்யப்பட்ட முதல் நாளிலே ஐபோன் 14 விற்பனையை விட 100% அதிகாமாக விற்பனையாகியுள்ளது.
Source - Dinamalar