Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் மொழி குறித்து மலேசியாவில் பிரதமர் மோடி பெருமை!!

தமிழ் மொழி குறித்து மலேசியாவில் பிரதமர் மோடி பெருமை!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Feb 2026 2:12 PM IST

பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணம் செய்தார். தலைநகர் கோலாலம்பூரில் பிரதமர் மோடியை மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார்.


இந்திய வம்சாவளியினர் பெருமளவில் பங்கேற்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய போது, இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான தொடர்பு இதயப்பூர்வமானது என்றும், உலகில் இந்திய வம்சாவளியினர் அதிகம் இருக்கும் இரண்டாவது நாடு மலேசியா என்றும் கூறினார்.


தமிழ் மொழி, உலகுக்கான இந்தியாவின் கொடை. தமிழ் இலக்கியம் நித்தியமானது, தமிழ் நண்பாடு உலகளாவியது. தமிழர்கள் தங்கள் திறமைகளால் மனித குலத்துக்கு சேவை செய்கின்றனர் என்றார்.


இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு வருகை தருமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில் இந்தியா உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு வசதிகளில் முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News