Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் புகாருக்கு ஆளான 17,59,000 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் புகாருக்கு ஆளான 17 லட்சத்து 59 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது.

இந்தியாவில் புகாருக்கு ஆளான 17,59,000 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!

ThangaveluBy : Thangavelu

  |  2 Jan 2022 1:39 PM GMT

இந்தியாவில் புகாருக்கு ஆளான 17 லட்சத்து 59 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. இந்தியாவில் போலியான நம்பர்களை வாங்கி அதன் மூலம் வாட்ஸ்அப்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தும் வருகின்றனர். அது போன்ற கணக்குகளை முடக்க வேண்டும் என்று இந்திய போலீசார் தரப்பில் வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு புகார்கள் சென்றுள்ளது.

இந்நிலையில், வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் பற்றி அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: 95 சதவீத கணக்குகள், அங்கீகாரமின்றி மொத்தமாக மெசேஜ்கள் அனுப்பி வந்ததாக கூறப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 500 புகார்களும், நவம்பரில் 603 புகார்களும் பதிவாகியுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி ஆறுமாத கால அறிக்கையை நவம்பரில் வெளியிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் பாதுகாப்புக்காக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வாடஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. இது போன்று போலீயான வாட்ஸ்அப் கணக்குளை தொடர்ந்து நீக்க வேண்டும் என்பது அனைத்து வாட்ஸ்அப் பயனாளர்களின் கருத்தாகும்.

Source: Polimer

Image Courtesy: Beebom



Next Story
கதிர் தொகுப்பு
Trending News