Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா 2வது அலையின் உச்சகட்டம்: இந்திய பிரதமருடன் உயர்மட்ட கூட்டம்!

கொரோனா 2வது அலையின் உச்சகட்டம்: இந்திய பிரதமருடன் உயர்மட்ட கூட்டம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 May 2021 6:53 PM IST

இந்தியாவில் கொரோனா நிலைமை இன்னும் மோசமாக உள்ள சூழலில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக இன்று அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவர்கள் இன்று உயர்மட்ட கூட்டத்தை நடத்தினார். அமைச்சர்கள், அதிகாரிகள் உற்பத்தியாளர்களுடன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் வழங்குவதற்கும் முழு ஒத்துழைப்புடன் இருப்பதாக பிரதமர் கூறினார்.


கடந்த சில வாரங்களாக ரெம்டெசிவிர் மருந்துகளின் உற்பத்தியும் கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா மிகவும் துடிப்பான மருந்துத் துறையைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார் மேலும் இந்திய அரசாங்கத்துடன் மருத்துவத்துறை மிகவும் நெருக்கமாக உள்ளதாக மருத்துவ துறையில் மிகவும் நெருக்கமாக உள்ளது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். ஒவ்வொரு மாநிலங்களுக்கு போதுமான அளவில் மருந்துகள் வழங்கப்படுவது குறித்து அவர் ஆய்வு செய்தார்.


தற்பொழுது உள்ள சூழ்நிலையில், ஆக்ஸிஜன் கிடைப்பது மற்றும் வழங்கல் குறித்த நிலைமையை பிரதமர் கேட்டு அறிந்து அதன் தொடர்பான பிரச்சினைகளையும் விவாதித்தார். முதல் அலையின் உச்சத்தின் போது இருந்ததை விட ஆக்சிஜன் தேவை இப்போது 3 மடங்கு அதிகமாக உள்ளது என்று எடுத்துரைக்கப்பட்டது.

ஆக்ஸிஜன் ரயில் மற்றும் IAF விமானங்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலவரையறையில் வென்டிலேட்டர்களை இயக்கவும், உற்பத்தியாளர்களின் உதவியுடன் தொழில்நுட்ப மற்றும் பயிற்சி சிக்கல்களை தீர்க்கவும் மாநிலங்களை கேட்க அறிய வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News