போடப்படும் 2 டோஸ்களும் ஒரே தடுப்பூசியாகத்தான் இருக்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு!

By : Bharathi Latha
தற்பொழுது இரண்டாவது அலை நாடு முழுவதும், மிகவும் தீவிரமாக தன்னுடைய கோர முகத்தைக் காட்டிக் கொண்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது இந்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. எனவே, தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டால் மட்டும் தான் ஒருவர் முழுமையாக தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை மருத்துவத் துறையினர் தற்போது தெரிவித்துள்ளனர்.
ஒரு நபருக்கு வழங்கப்படும் இரண்டு டோஸ்களும் ஒரே தடுப்பூசியாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் தற்பொழுது கூறியுள்ளது. உத்தரபிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தில் 20 கிராமவாசிகள் முதல் டோஸ் கோவிஷீல்ட் பெற்ற நிலையில், கோவாக்சின் இரண்டாவது டோஸாகப் போடப்பட்டது. இந்த சம்பவம் பார்னியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, ஆடாஹி கலா மற்றும் மற்றொரு கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்துள்ளது. அவர்கள் முதல் டோஸ் கோவிஷீல்ட் போட்டுக்கொண்ட நிலையில் 2வது டோஸ் கோவாக்சின் பெற்றதாகக் கூறப்படுகிறது.
எனவே இங்கு ஏற்பட்டுள்ள இந்த குழப்பமான சூழ்நிலையில் மத்திய அரசின் புதிய நெறிமுறைகள் படி, தற்போது புதிய கருத்துக் கூறியுள்ளது. கொடுக்கப்பட்ட இரண்டு டோஸ்களும் ஒரே தடுப்பூசியாக இருக்க வேண்டும் என்ற எங்கள் நெறிமுறை தெளிவாக உள்ளது. இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும். எது நடந்தாலும் அது கவலைக்குரியதாக இருக்கக்கூடாது என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் V.K.பால் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறினார்.
