கோவிஷீல்டு 2வது டோஸ் செலுத்திக் கொள்ள இவர்களுக்கு சலுகை!

By : Bharathi Latha
இந்தியாவில் தற்போது அனைத்து மக்களிடமும் தடுப்பூசி குறித்து ஒரு நேர்மறையான எண்ணம் உருவாகி இருக்கிறது. குறிப்பாக அனைவரும் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு ஆக வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு சென்றுள்ளார்கள். எனவே மக்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் அதுவும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கட்டாயம் அதை செலுத்திய ஆகவேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் தங்களுடைய இரண்டாவது டோஸ் தடுப்பூசியில் சுமார் 84 நாட்கள் பிறகு எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தற்பொழுது கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கும் அங்கு பணிபுரிய செல்லும் ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை செலுத்திக்கொள்ள 84 நாட்கள் காத்திருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. அதாவது அவர்கள் முதல் டோஸ் இந்தியாவிலிருந்து செலுத்தி கொள்கிறார்கள் பிறகு பல்வேறு காரணங்களால் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அத்தகையவர்கள் இரண்டாவது டோஸ் எடுப்பது மிகவும் கடினமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் தற்பொழுது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை 28 நாட்கள் இடைவெளிவிட்டு செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
