Kathir News
Begin typing your search above and press return to search.

'காஷ்மீரில் 2 சீக்கிய பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம்' - சீக்கியர்கள் போராட்டம்!

காஷ்மீரில் 2 சீக்கிய பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம் - சீக்கியர்கள் போராட்டம்!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  28 Jun 2021 3:23 PM GMT

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 62 வயது முதியவருக்கு திருமணம் செய்து வைக்க இரண்டு சீக்கிய பெண்களை துப்பாக்கி முனையில் கடத்தி உள்ளனர். மேலும் அந்த இரண்டு பெண்களை முஸ்லீம் மதத்திற்கு கட்டாய மத மாற்றம் செய்துள்ளனர். இந்த செயலை கண்டித்து, சீக்கியர்கள் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


வயதான நபர்களுக்குத் திருமணம் செய்து வைக்க, ஜம்மு - காஷ்மீரில் சீக்கிய பெண்கள் இருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மன்ஜிந்தர் எஸ் சிர்சா தலைமையில் சீக்கியர்கள் நேற்று காஷ்மீரில் ஸ்ரீநகர் நீதிமன்ற வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து, மன்ஜிந்தர் எஸ் சிர்சா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது "62 வயதுடைய முதியவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக, இரு சீக்கிய சிறுமிகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டங்கள் வலுவாக்கப்பட்டு உள்ளதைப் போல், யூனியன் பிரதேசங்களிலும் சட்டங்களை வலுவாக்க வேண்டும். மேலும் காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா ,கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக நிச்சியம் காஷ்மீரில் சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். அவர் அளித்த உறுதியை அனைத்து சீக்கியர்களும் ஏற்று கொண்டனர். " என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News