Begin typing your search above and press return to search.
அமர்நாத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்ட 2 தீவிரவாதிகளை பிடித்த பொதுமக்கள்!

By :
அமர்நாத்தில் மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த 2 தீவிரவாதிகளை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரியாசி மாவட்டம், துக்சன் தாக் என்ற கிராமத்தில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு பேர் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் நடமாட்டம் கிராம மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் இரண்டு பேரையும் சுற்றி வளைத்து பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
அவர்கள் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர். இரண்டு பேரிடமும் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஏராளமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடித்துக் கொடுத்த கிராம மக்களுக்கு போலீசார் சன்மானம் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Polimer
Next Story