கோயிலுக்கு செல்லும் சாலையில் ஆணிகள் வீசி சென்ற 2 பிஎஃப்ஐ அமைப்பினர் - பக்தர்களுக்கு தொந்தரவு தர சதி!
By : Kathir Webdesk
கோயிலுக்கு செல்லும் சாலையில் ஆணிகளை வீசி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இரண்டு பேர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் உள்ள தத்த பீட கோயிலில் திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு வந்த வாகனங்கள் அதிகளவில் பஞ்சர் ஆனதாக கோயில் நிர்வாகத்துக்கு புகார் வந்தது.
அப்போது தத்தபீட பிரதான சாலையில் கோயில் நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். ஏராளமான ஆணிகளை கண்டெடுத்தனர்.
சாலையோரம் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். 2 பேர் இரவு நேரத்தில் சாலையில் ஆணிகளை வீசியது தெரியவந்தது. இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர் சிக்கமகளூரு போலீஸில் புகார் அளித்தனர்.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் முகமது ஷபாஸ் (23), வாஹித் உசேன் (21) ஆகிய 2 இளைஞர்கள் ஆணிகளை வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை சிக்கமகளூரு போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.
இருவரும் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கோயில் திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு தொந்தரவு தரும் நோக்கில் சாலையில் ஆணிகளை வீசியுள்ளனர்.
Input From: Opindia