Begin typing your search above and press return to search.
மகாத்மா ஜோதிபா புலே பிறந்தநாள் 200வது விழா!! பிரதமர் மோடி - ராகுல் காந்தி சந்திப்பு!!

By : Bharathi Latha
மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி காரில் வந்து இறங்கினார். மேலும் அங்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மாநிலங்களவை முன்னாள் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.
பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் சிறிது நேரம் சுமுகமாக உரையாடிக் கொண்டிருந்தனர். இருவரும் பொது மேடைகளிலும் அரசியல் கூட்டங்களிலும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வரும் நிலையில் இந்த உரையால் நிகழ்ந்தது.
பிரேர்னா ஸ்தலில் மகாத்மா ஜோதிபா புலேவுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
Next Story
