Kathir News
Begin typing your search above and press return to search.

உள்கட்டமைப்பு வசதின்னா என்னன்னே தெரியாத காங்கிரஸ்: 2014க்கு பிறகு நடந்த அசாத்திய மாற்றம்!

உள்கட்டமைப்பு வசதின்னா என்னன்னே தெரியாத காங்கிரஸ்: 2014க்கு பிறகு நடந்த அசாத்திய மாற்றம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 May 2023 3:21 AM GMT

21-ஆம் நூற்றாண்டில் இந்தியா, தனது உள்கட்டமைப்புத் திறனை அதிகப்படுத்துவதன் மூலம் வளர்ச்சியில் மேலும் பல உச்சங்களை எட்ட முடியும். உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை முந்தைய அரசுகள் புரிந்து கொள்ளவில்லை என பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவில் அதிவேக ரயில்கள் தொடர்பாக முந்தைய அரசுகள் பெரிய வாக்குறுதிகளை வழங்கியபோதிலும், ரயில்வே கட்டமைப்பில் இருந்து ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளை அகற்றுவதில் கூட, அவை வெற்றி பெறவில்லை. ரயில் பாதைகள் மின்மயமாக்கலில் அந்த அரசுகளின் நிலை இன்னும் மோசமாக இருந்தது.

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டின் மூன்றில் ஒரு பகுதி ரயில் பாதைக் கட்டமைப்பு மட்டுமே மின்மயமாக்கப்பட்டு இருந்தன. வேகமாக செல்லும் ரயிலை அப்போது நினைத்துப் பார்க்க முடியாத நிலை இருந்தது.

ரயில்வேத்துறையை முற்றிலும் மாற்றியமைப்பதற்கான அனைத்து பணிகளும் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கியது. நாட்டின் முதல் அதிவேக ரயிலின் கனவை செயல்படுத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், பாதியளவு அதிவேகத்தில் செல்லும் ரயில்களுக்கான முழு கட்டமைப்பும் தயார்படுத்தப்படுகிறது.

2014-ஆம் ஆண்டுக்கு முன் ஆண்டுக்கு சராசரியாக 600 கிலோமீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்ட நிலையில், தற்போது ஆண்டுதோறும் 6 ஆயிரம் கிலோமீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, நாட்டின் 90 சதவீதத்துக்கும் அதிகமான ரயில்வே பாதை கட்டமைப்பு மின்மயமாக்கப்பட்டுள்ளது. உத்தராகண்டில், ரயில் பாதை கட்டமைப்பு 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டு சாதனை எட்டப்பட்டுள்ளது.

Input From: PMindia


Next Story
கதிர் தொகுப்பு
Trending News