Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவை முந்தும் இந்தியா - 2028ல் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் நடக்கப்போகும் மாற்றம்!

சீனாவை முந்தும் இந்தியா - 2028ல் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் நடக்கப்போகும் மாற்றம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Sep 2022 4:28 AM GMT

புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது என மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

விஞ்ஞானிகளும் அவர்களின் ஆராய்ச்சிகளும் நாட்டின் அடுத்த 25 வருட வளர்ச்சிக்கு அவசியம். 2047ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும். அதற்கு இந்தக் குறிக்கோள்களை நாம் பின்பற்ற வேண்டும். தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். 2028ல் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இந்தியாவில் உயரும்.

2026ல் நமது நாட்டில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை 65% ஆக அதிகரிக்கும். எனவே நமது நாடு 2047ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சக்தியாக விளங்கும்.உலக அளவில் 58 சி.இ. ஓ க்கள் இந்தியர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் இந்தியக் கல்வி முறையில் பயின்றவர்கள்.

சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள 25% நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன.100 யூனிகான் நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. இது கடந்த 5 வருடங்களில் அதிகரித்துள்ளது.

2014-15ல் 42,000 என இருந்த காப்பீட்டு ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை, இந்த வருடம் 66,000 ஆக அதிகரித்துள்ளன. புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. 760 மெய் நிகர் அறிவியல் ஆய்வகங்கள், திறன் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

Input From: PIB

Next Story
கதிர் தொகுப்பு
Trending News