மசகான் கப்பல் நிறுவனத்துடன் ரூ.2,275 கோடி மதிப்பில் ஒப்பந்தம் - தட்டி தூக்கும் மோடி அரசு!
By : Kathir Webdesk
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 2023, ஜூன் 30ம் தேதி ஐஎன்எஸ் ஷான்குஷ் நீர்மூழ்கிக் கப்பலின் மறுசீரமைப்பு சான்றிதழுக்காக மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் மும்பையில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.2,275 கோடி ஆகும்.
எஸ்எஸ்கே வகை நீர்மூழ்கிக் கப்பலான ஷான்குஷ், மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் மறுவடிவமைப்புக்கு உட்படுத்தப்படும். அவ்வாறு மறுவடிவமைப்பு செய்யப்படும் நீர்மூழ்கிக் கப்பல் 2026-ம் ஆண்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் ஷான்குஷ் சேர்க்கப்படும்.
இந்தத் திட்டத்தில் 30 சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்தத் திட்டம் மத்திய அரசின் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான முக்கிய படியாக கருதப்படும்.
இதே போல, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரகப் போர் விமானம் தேஜஸ், இந்திய விமானப்படையில் ஏழு வருட சேவையை நிறைவு செய்கிறது. இது வான் பாதுகாப்பு, கடல்சார் உளவு மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் லிமா-2019, துபாய் ஏர் ஷோ-2021, 2021ல் இலங்கை விமானப்படை ஆண்டு விழா, 2022ல் ஏர் ஷோ மற்றும் 2017 முதல் ஏரோ இந்தியா ஷோ உட்பட பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் விமானத்தை காட்சிப்படுத்தியதன் மூலம் இந்தியா தனது போர் விமானத் தயாரிப்பு வல்லமையை நிரூபித்துள்ளது.
Input From: NewsOnair