தினசரி 3 லட்சம் ரெம்டெசிவர் மருந்துகள் உற்பத்தி: மத்திய அமைச்சர் தகவல்!

By : Bharathi Latha
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்தான ரெம்டெசிவிர் மருந்துகளை அதிக அளவில் உற்பத்தி செய்வதன் மூலம் தான், தற்போது உள்ள இரண்டாம் சுற்று கொரோனா தொற்று நோயின் தாக்கத்தை நம்மால் குறைக்க முடியும். எனவே இந்தியா தற்போது ரெம்டெசிவிர் மருந்துகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதில் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டு வருகிறது.
நாட்டில் தொற்றுநோய் நிலைமை மற்றும் கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதற்கான முக்கியமான மருந்துகளின் தேவை அதிகரித்த நிலையில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ரெம்டெசிவிர் உற்பத்தி அதிகரித்து வருவதாகவும், மிக விரைவில் ஒரு நாளைக்கு 3 லட்சம் டோஸ்களை அடைவதாகவும் தெரிவித்தார். "ரெம்டெசிவிர் உற்பத்தி திறன் இப்போது மாதத்திற்கு 90 லட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் திறன் எட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இது மாதத்திற்கு 40 லட்சம் டோஸ்களை உற்பத்தி செய்தது. மிக விரைவில் ஒரு நாளைக்கு 3 லட்சம் டோஸ்களை உற்பத்தி செய்யும்" என்று மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா ட்வீட் செய்துள்ளார்.
ஏப்ரல் 12 முதல், ரெம்டெசிவிர் உற்பத்திக்கான 25 புதிய உற்பத்தி தளங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தி திறன் இப்போது மாதத்திற்கு 90 லட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ்களைக் உற்பத்தி செய்யும் கொண்டுள்ளது. "மிக விரைவில், ஒரு நாளைக்கு 3 லட்சம் டோஸ்களை தயாரிக்கும். தினசரி அடிப்படையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என அவர் மேலும் கூறினார்.
