Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவுக்கு எதிராக வன்முறை ஜிகாத்! காஷ்மீரில் 3 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை குறி வைத்து தூக்கிய தேசிய புலனாய்வு அமைப்பு!

இந்தியாவுக்கு எதிராக வன்முறை ஜிகாத்! காஷ்மீரில் 3 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை குறி வைத்து தூக்கிய தேசிய புலனாய்வு அமைப்பு!
X

MuruganandhamBy : Muruganandham

  |  13 July 2021 9:46 AM IST

ஜம்மு-காஷ்மீரில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு இருப்பதாகக் கூறி மூன்று பேரை தேசிய புலனாய்வு அமைப்பு திங்கள்கிழமை கைது செய்தது.

இந்தியாவுக்கு எதிராக வன்முறை ஜிகாத் நடத்துவதற்காக இந்தியாவில் இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட உமர் நிசார், தன்வீர் அஹ்மத் பட் மற்றும் ரமீஸ் அஹ்மத் லோன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்ததாக என்ஐஏ ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியது. மூன்று நபர்களும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் பகுதியில் வசித்து வருகின்றனர்.

காஷ்மீரில் ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் உட்பட ஏழு இடங்களில் விசாரணை நிறுவனம் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியதை அடுத்து இந்த கைதுகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து பல்வேறு மோதல்களில் ஈடுபட போலி ஆன்லைன் அடையாளங்களை வலையமைப்பை உருவாக்கியுள்ளனர். அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.

"இதுதொடர்பாக, இந்தியாவை மையமாகக் கொண்ட ஆன்லைன் பிரச்சார இதழ் 'the Voice of Hind' (VOH)மாதாந்திர அடிப்படையில் வெளியிடப்படுகிறது. இது இளைஞர்களைத் தூண்டுவதற்கும் தீவிரப்படுத்துவதற்கும் செயல்பட்டு வந்துள்ளது.

என்ஐஏ சோதனைகளின் போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் மொபைல் சாதனங்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் சின்னத்தைக் கொண்ட டி-ஷர்ட்கள் போன்ற டிஜிட்டல் சாதனங்களை மீட்டெடுக்கப்பட்டது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News