Kathir News
Begin typing your search above and press return to search.

சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சறுத்தலை எதிர்கொள்ள தயார் - இந்திய கடற்படைக்கு வலுசேர்க்க 3 நீர்மூழ்கி கப்பல்கள்!

சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சறுத்தலை எதிர்கொள்ள தயார் - இந்திய கடற்படைக்கு வலுசேர்க்க 3 நீர்மூழ்கி கப்பல்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Oct 2022 9:52 AM GMT

சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சறுத்தலை எதிர்கொள்ள இந்திய கடற்படைக்கு குறைந்தது 18 டீசல் -எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் 4, அணு ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கி கப்பல்கள் 6 ஆகியவை தேவை.

சீனா தனது கடற்படையின் பலத்தை அதிகரித்து வருகிறது. சீனாவிடம் 50 டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள், 10 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. மேலும், பாகிஸ்தானுக்கு 8 யுவான் ரக நீர்மூழ்கி கப்பல்களை சீனா வழங்கவுள்ளது.

இதனால், இந்திய கடற்படையும், தனது நீர்மூழ்கி கப்பல்களின் பலத்தை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. ரூ.42,000 கோடி மதிப்பில் 6 புதிய தலைமுறை நீர்மூழ்கி கப்பல்களை வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

'ப்ராஜக்ட்-75' திட்டத்தின் கீழ் 6 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை ரூ.23,000 கோடி செலவில் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்க ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது.

. இவைகள், மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் டார்பிடோ ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை ஏவும் திறன் படைத்தவை. இவற்றில் அதி நவீன சென்சார் மற்றும் சோனார் கருவிகளும் உள்ளன.

Input From: Times of india

Next Story
கதிர் தொகுப்பு
Trending News