நியூசிலாந்து நாட்டு மக்கள் தொகையை விட 3 மடங்கு அதிக தடுப்பூசி செலுத்திய இந்தியா - 12.71 கோடியைக் கடந்தது சாதனை!

By : Muruganandham
கொரோனா தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ், இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12.71 கோடியைக் கடந்துள்ளது. இது நியூசிலாந்து நாட்டு மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
ஏப்ரல் 20ஆம் தேதி காலை 7 மணி வரை, 18,83,241 முகாம்களில் 12,71,29,113 பயனாளிகளுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 32 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 94-வது நாளான ஏப்ரல் 19அன்று நாடு முழுவதும் 32,76,555 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 77.67 விழுக்காடு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 58,924 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 28,211 பேரும், தில்லியில் 23,686 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது 20,31,977 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 13.26 சதவீதமாகும்.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,31,08,582 ஆக (85.56%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,54,761 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.18 சதவீதமாகக் குறைந்துள்ளது.
