Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா முழுவதும் 30,000 டன் ஆக்சிஜன் விநியோகம் : ரயில்வே அமைச்சகம்.!

இந்தியா முழுவதும் 30,000 டன் ஆக்சிஜன் விநியோகம் : ரயில்வே அமைச்சகம்.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Jun 2021 12:46 PM GMT

நாடு முழுவதும் தற்பொழுது தோற்று நோயின் தாக்கம் குறைந்திருந்தாலும், பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையாக இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகம் செய்தல் போன்ற செயல்களில் இந்திய ரயில்வே துறை மிகவும் விழிப்புடன் இருந்து தான் வருகிறது. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் ரயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் தேவையான அளவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ திரவ ஆக்சிஜனை டேங்கர்களில் அடைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் வினியோகிக்கும் பணி, கடந்த ஏப்ரல் 24ம் தேதி தொடங்கியது. இவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


மொத்தமாக நாடு முழுவதும் இந்த ரயில்கள் மூலம் இதுவரை 30,182 மெட்ரிக் டன் மருத்துவ திரவ ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் சார்பில் தெரிவித்துள்ளது. 1,734 டேங்கர்களில் அடைத்து, 421 ரயில்கள் மூலம் இவை விநியோகிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 4,941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News