Kathir News
Begin typing your search above and press return to search.

மியான்மரில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக ஐ.நா. சபையில் ஓட்டெடுப்பு : இந்தியா உள்பட 36 நாடுகள் புறக்கணிப்பு!

மியான்மரில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக ஐ.நா. சபையில் ஓட்டெடுப்பு : இந்தியா உள்பட 36 நாடுகள் புறக்கணிப்பு!

ParthasarathyBy : Parthasarathy

  |  19 Jun 2021 1:57 PM GMT

தற்போது மியான்மாரில் ராணுவம் ஆட்சி நடப்பதை குறித்து, அங்குள்ள பொது மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மியான்மரில் நிலவும் இந்த சூழ்நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு நடைபெற்றது. ஆனால் இந்த ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

மியான்மரில் பொது மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் நிலையில், அங்கு நிலவும் சூழ்நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 119 நாடுகள் ஓட்டு அளித்தன. பெலாரஸ் மட்டும் எதிராக ஓட்டளித்தது. மியான்மர் மற்றும் பிற நாடுகளான இந்தியா, வங்கதேசம், பூடான், நேபாளம், சீனா, லாவோஸ், தாய்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட 36 நாடுகள் இந்த ஓட்டெடுப்பை புறக்கணித்தன.


இது தொடர்பாக ஐ.நா. விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கூறியதாவது "மியான்மரின் அண்டை மற்றும் பிராந்திய நாடுகளுடன் ஆலோசனை நடத்தாமல் அவசர கதியில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது, தற்போதைய சூழ்நிலைக்கு உதவாது. மேலும், மியான்மரில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காண முயலும் ஆசியான் அமைப்பின் முயற்சிகளுக்கும் எந்த பலனையும் அளிக்காது." என்று அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News