அபாரம்! வெற்றிகரமாக 41.52 கோடி தடுப்பூசிகள்!

By : Bharathi Latha
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தடுப்பூசிகளை கண்டுபிடித்தபின், கொரோனா தொற்றுக்கு எதிராக நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக முழுமூச்சுடன் தடுப்பூசி பணிகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தியாவில் அதிகமான மக்களின் விழிப்புணர்வின் காரணமாக தடுப்பூசிகள் போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மேலும், இந்தியாவில் இதுவரையில் 41.52 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அனைத்து மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக, மாநிலங்களுக்கு முன்பு கட்டணத்திற்கு வழங்கி வந்த தடுப்பூசிகளை இலவசமாக கொடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கும் விதமாகவும் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களான சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் டிசம்பர் மாதம் வரையில் 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு போட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும என்பதில் மத்திய அரசு இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இதுவரையில் 41.52 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 31.79 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது
