Kathir News
Begin typing your search above and press return to search.

ஜவுளித்துறையில் 45 மில்லியன் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு - மத்திய அரசு கொண்டுவரப்போகும் திட்டம்!

ஜவுளித்துறையில் 45 மில்லியன் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு - மத்திய அரசு கொண்டுவரப்போகும் திட்டம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Dec 2022 8:25 AM IST

ஜவுளித்துறையில் 45 மில்லியன் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நெசவுத்தொழில் நவீனமயமாக்கல், ஒருங்கிணைந்த மேம்பாட்டுத்திட்டம், தேசிய கைத்தறி மேம்பாட்டுத்திட்டம், தேசிய கைவினை மேம்பாட்டுத்திட்டம், ஜவுளித் தொழில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் இந்த வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக அளவில் இந்திய ஜவுளி உற்பத்திப் பொருட்களை அதிகரிக்க மத்திய அரசு உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியம் மற்றும் ஆயத்த ஆடை பூங்காக்கள் திட்டத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 7 மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

அதே போல நெசவாளர்கள் வழங்கப்படும் கடன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் 1,17,678 பேருக்கு கைத்தறித்துறையில் கடன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

சத்தீஷ்கர், ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அசாம் உள்பட நாடு முழுவதும் கைத்தறி நெசவாளர்களுக்கு மூலப்பொருள் விநியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், அனைத்துவிதமான நூலுக்கும் சரக்குக் கட்டணங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்சமயம் விசைத்தறித் தொழிலுக்கு எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இருப்பினும் விசைத்தறித்துறை நீடித்த வளர்ச்சி பெறுவதற்கான அடிப்படை நடைமுறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Input From: Business World

Next Story
கதிர் தொகுப்பு
Trending News