விமானத்தில் பறந்து கொண்டே இலக்கை தாக்கும் திறன் : பைத்தான்-5 வான்வழி தாக்குதல் ஏவுகணையின் முதல் சோதனை அபார வெற்றி!

By : Muruganandham
இந்தியாவின் இலகு ரக போர் விமானமான தேஜாஸ், ஐந்தாம் தலைமுறை பைத்தான்-5 வான்வழி தாக்குதல் ஏவுகணையை தன்னுடைய ஆயுத திறனுடன் சேர்த்துக் கொண்டது
தேஜாசுடன் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள Derby Beyond Visual Range (BVR) வான்வழி ஏவுகணையின் அதிகரிக்கப்பட்ட திறனையும் மதிப்பிடுவதற்காக சோதனைகள் நடத்தப்பட்டன. மிகவும் சவாலான சூழ்நிலைகளில் ஏவுகணைகளின் திறனை சோதித்து பார்ப்பதற்காக இந்த சோதனைகள் கோவாவில் நடத்தப்பட்டன.
டெர்பி மற்றும் பைத்தான் ஏவுகணைகள் இலக்குகளை கச்சிதமாக தாக்கி தங்கள் முழுத்திறனை நிரூபித்தன. திட்டமிடப்பட்ட அனைத்து நோக்கங்களையும் சோதனைகள் அடைந்தன.
இந்த சோதனைகளுக்கு முன்னதாக, Avionics, Fire-control radar, Missile Weapon Delivery System மற்றும் விமான கட்டுப்பாட்டு அமைப்பு போன்ற தேஜாஸ் போர் விமானத்தில் உள்ள அமைப்புகளுடன் ஏவுகணையின் ஒருங்கிணைப்பை மதிப்பிடுவதற்காக விரிவான சோதனைகள் பெங்களூருவில் நடத்தப்பட்டன.
கோவாவில் வெற்றிகரமாக நடைபெற்ற பிரிப்பு சோதனைகளுக்கு பிறகு, ஏவுகணையின் நேரடி ஏவுதல் சோதனை, இலக்கு ஒன்றின் மீது நடைபெற்றது. அனைத்து கூறுகளையும் ஆய்வு செய்வதற்காக நடைபெற்ற இந்த சோதனைகளில், இலக்கை சரியாக ஏவுகணை தாக்கியது.
தேசிய விமான சோதனை மையத்தை சேர்ந்த இந்திய விமானப்படை சோதனை விமானிகள் வான்வழி மேம்பாட்டு முகமையின் தேஜாஸ் போர் விமானத்தில் இருந்து இந்த ஏவுகணைகளை சோதனை செய்து பார்த்தனர்.
