Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்மு எல்லையில் ட்ரோன் தாக்குதலை முறியடித்து, 5 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல்!

ஜம்மு எல்லையில் ட்ரோன் தாக்குதலை முறியடித்து, 5 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல்!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  24 July 2021 2:53 AM GMT

ஜம்முவில் கடந்த சில நாட்களுக்கு முன் விமானப்படை தளத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு பாதுகாப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். அவ்வப்போது, பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழையும் ட்ரோன்களை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்தனர்.இந்நிலையில், ஜம்மு எல்லையில் கனசக் பகுதியில் நுழைந்த ட்ரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர் மேலும், அதில் இருந்த 5 கிலோ வெடிபொருட்களையும் பறிமுதல் செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த ட்ரோன் சம்பவம் குறித்து ADGP முகேஷ் சிங் கூறுகையில் "இன்று அதிகாலை 1 மணியளவில் கனசக் பகுதியில் ட்ரோன் வருவதை அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் அந்த ட்ரோனை நோக்கி அங்கு இருந்த அதிகாரிகள் சுட்டு வீழ்த்தினார். சுடப்பட்ட ட்ரோனை அங்கு இருந்த காவலர்கள் கைப்பற்றினர், மேலும் அதில் இருந்த 5 கிலோ வெடிபொருட்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.


பறிமுதல் செய்யப்பட்ட ட்ரோன் கருவி என்பது விமான கட்டுப்படுத்துதல் மற்றும் GPS போன்ற தொழில்நுட்பம் கொண்ட ஒரு 'hexacopter'ஆகும். இந்த ட்ரோனை சீனா மற்றும் தைவானில் இருந்து சில பாகங்களை சேர்த்து உருவாக்கப்பட்டது என்று தெரிய வந்தது. அது மட்டுமின்றி ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட ட்ரோன் கருவியில் பயன்படுத்தபட்ட அதே முறையான கயிறு தான் தற்போது உள்ள ட்ரோனிலும் பயன்படுத்த பட்டிருக்கிறது." என்று அவர் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News