Kathir News
Begin typing your search above and press return to search.

உத்திர பிரதேசத்தில் 5 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளை 4 மடங்கு அதிகரித்து யோகி சாதனை - குவியும் பாராட்டு!

உத்திர பிரதேசத்தில் 5 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளை 4 மடங்கு அதிகரித்து யோகி சாதனை - குவியும் பாராட்டு!
X

JananiBy : Janani

  |  4 July 2021 9:04 AM GMT

உத்தரப் பிரதேசத்தில் சுகாதார மற்றும் மருத்துவ கல்வித் துறையில் தொடர் வளர்ச்சியாக, ஜூன் 9-ஆம் தேதி மாநிலத்தில் ஒன்பது புதிய மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.


மேலும் இந்த அனைத்து ஒன்பது கல்லூரிகளும் ஒரு வாரக் காலத்திற்குள் செயல்படும் மற்றும் மாநிலத்தின் மொத்த கல்லூரி எண்ணிக்கை 48 ஆக உயர்த்தும். இந்த ஒன்பது புதிய கல்லூரிகள், காக்ஸிபுர், ஹாடோய், மிர்சாபூர், தியோரியா, எட்டா, பாடேஹபுர், ஜாஉன்பூர் மற்றும் சித்தார்த்நகர் முதலிய இடங்கை உள்ளது.

இந்த ஒன்பது மருத்துவக் கல்லூரிகளுக்கும், 70 சதவீதம் ஆசிரியர் பணியாளர்களைத் தேர்வு செய்துள்ளது மற்றும் மீதமுள்ள பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணியும் தற்போது நடந்து வருகின்றது. இந்த கல்லூரிகளுக்கான 450 ஊழியர்களுக்கான பணி நியமன கடிதங்களைப் பிரதமர் மோடி அவர்களே வழங்கவுள்ளார்.

இந்த ஒன்பது கல்லூரிகளைத் தவிர இந்த ஆண்டு மேலும் நான்கு கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளது.

மார்ச் 2017 வரை உத்தரப் பிரதேசத்தில் வெறும் 12 மருத்துவக் கல்லூரிகளே இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மேலும் 36 கல்லூரிகள் சேர்க்கப்பட்டுள்ளன.


முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னர், நோயாளிகள் சிகிச்சைக்காக அடுத்த மாவட்டங்களுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி என்பதை அறிக்கையில் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News