பிரதமர் மோடி அரசு 50 முக்கிய முடிவுகளை எடுத்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: அமித்ஷா பேச்சு!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
By : Thangavelu
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
எப்ஐசிசிஐ கூட்டம் ஒன்றில் உள்துறை அமைச்சர் பேசியதாவது: கடந்த 7 ஆண்டுகளில் ஒரு முறைகேடு புகார் கூட மத்திய அரசு மீது வரவில்லை. நாங்கள் மிகவும் நேர்மையுடன் ஆட்சி வழங்கி வருகிறோம். பல்வேறு முடிவுகளையும் அதிரடியாக எடுத்துள்ளோம். அதில் ஏதோ ஒன்று அல்லது இரண்டு தவறாக போயிருக்கலாம். ஆனாலும் எவ்வித தவறான நோக்கத்திற்காகவும் முடிவு எடுத்தது இல்லை என்றார்.
மேலும், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சுமார் 60 கோடி மக்கள் வங்கிக்கணக்கு, மின்சார வசதி, காஸ் இணைப்பு மற்றும் சுகாதாரம் வசதிகள் எதுவும் கிடைக்காமல் அவதியுற்று வந்தனர். ஆனால் அதனை எல்லாம் பிரதமர் மோடி அரசு பூர்த்தி செய்துள்ளது. இதனால் இந்தியா மிகப்பெரிய வளச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, ராமர் கோயில் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை மத்திய அரசு அதிரடியாக செய்துள்ளது. அடுத்து வருகின்ற 100 ஆண்டுகளை மனதில் வைத்து பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. அதாவது 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar