Kathir News
Begin typing your search above and press return to search.

ஜன்தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடி.. 9 ஆண்டுகளில் சாதனை..

ஜன்தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடி.. 9 ஆண்டுகளில் சாதனை..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Aug 2023 11:47 AM IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பிறகு நேரடியாக மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில் முக்கியமான திட்டமான பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் 2023 ஆகஸ்ட் 9, நிலவரப்படி மொத்த ஜன்தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது. இவற்றில் 56 சதவீத கணக்குகள் பெண்களின் கணக்குகளாகும். 67 சதவீத கணக்குகள் கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரப்பகுதிகளிலும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகளில் வைப்புத் தொகை ரூ. 2.03 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. இந்த கணக்குகளுக்கு சுமார் 34 கோடி ரூபே அட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.


பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் சராசரி இருப்பு ரூ. 4,076 ஆகும். மேலும் 5.5 கோடிக்கும் அதிகமான பிரதமரின் ஜன்தன் கணக்குகள், அரசு திட்டங்களுக்கான நேரடி பணப்பரிமாற்ற பலன்களைப் பெறும் கணக்குகளாக உள்ளன. பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம் நாட்டின் நிதிச்சூழலை சிறப்பாக மாற்றியமைப்பதில் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் வயது வந்தவர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற கிட்டத்தட்ட கொண்டு வந்துள்ளது.


தொழில்நுட்பம், ஒத்துழைப்பு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள் மூலமாக முறையான வங்கி நடைமுறைகளுடன் அனைவரையும் வங்கி சேவையில் இணைக்கும் விரிவான தன்மையை கொண்டுள்ளதே இந்த திட்டத்துக்கான வெற்றியின் மையப்புள்ளியாக அமைந்துள்ளது. குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவை இல்லாத வங்கிக் கணக்கு, ரூ. 2 லட்சம் வரையிலான விபத்து காப்பீடு, ரூ. 10,000 வரை மிகைப்பற்று வசதி போன்ற பல வசதிகளை பிரதமரின் ஜன்தன் வங்கிக்கணக்கு வழங்குகிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News