இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!! 500 பில்லியன் டாலர் இறக்குமதி திட்டம்!!

By : Bharathi Latha
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளைச் செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் எரிசக்தி பொருள்கள், விமானம், விமான பாகங்கள், முக்கிய உலோகங்கள், டெக்னாலஜி பொருள்கள், கோக்கிங் நிலக்கரி ஆகியவை அடங்கும்.
2023-24 நிதியாண்டில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 42.20 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்துள்ளது. 2024-25 நிதியாண்டில், அமெரிக்காவில் இருந்து இந்தியா 45.63 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்திருந்தது.
அமெரிக்காவில் இருந்து கோக்கிங் நிலக்கரி, விமானங்கள், அதன் இன்ஜீன்கள், உதிரி பாகங்களை இறக்குமதி செய்வோம். 80-100 பில்லியன் டாலர்களை வெறும் சிவில் விமானங்கள் மூலமே அடைந்துவிடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா கூட்டறிக்கையில் "இதில் இரு நாடுகளில் எந்த நாடு வரியை மாற்றினாலும், மற்ற நாடு அவர்களது கமிட்மென்டை அதற்கேற்றவாறு மாற்றலாம்" என்று இடம்பெற்றுள்ளது. இதன் பொருள், அமெரிக்கா வரியை மாற்றினால், இந்தியாவின் முடிவிலும் மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கும்.
